இலங்கையின் 9வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் எவ்வித வன்முறையுமின்றி நடைபெற்றது. சில மணி நேரங்களில் முடிவுகள்

இலங்கை . August, 07 2020

news-details

இலங்கையின் 9வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் எவ்வித வன்முறையுமின்றி நடைபெற்றது. சில மணி நேரங்களில் முடிவுகள்

இலங்கையின் 9வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் நாடாளுமன்றத் தேர்தல் 5/8/2020 புதன்கிழமை எந்தவித வன்முறைகளுமின்றி நடந்து முடிந்துள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 77 வாக்கு எண்ணும் நிலையங்களில் வியாழக்கிழமை காலை 7 மணிமுதல் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கவுள்ளன. பெரும்பாலும் வியாழக்கிழமை இரவு அல்லது வெள்ளிக்கிழமை காலைக்குள் மொத்த முடிவுகள் தெரியவரும். இலங்கையில் 16 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் . 225 ஆசனங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தலில் 7,400 பேர் போட்டியிடுகின்றனர். முடிவுகளுக்காகக் காத்திருப்போம்.