இலங்கை . July, 12 2020
இலங்கை அரசியலில் பிளவுபட்டு நிற்கும் அரசியல் சத்திகள்;
ஈகோயிசம் தலைவிரித்தாடும் தமிழ்த் தலைமைகள்.
கடந்த 70 ஆண்டுகால தமிழர் உரிமைப் போராடமாடும் இன விடுதலைப் போராடடமாகட்டும் எந்தவித முன்னேற்றத்தையும் காணாது வெறும் வாய்ச் சவாடல்களுடனே காலம் வீணாக்கப்படும் அவலம் தொடர்கிறது. நெச்சுரம் மிக்க அரசியல் தலைமை இல்லாத கொடுமை ஈழத் தமிழரின் சாபக்கேடாக அமைந்துவிட்டது கண்கூடு. இதுவே சிங்கள அரசியல் தலைமைகள் ஒருமையாக ஒற்றுமையாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் அவ்வப்போது ஏதாவது சொல்லி தங்கள் அரசியலை நடத்தக் காரணமாகவுள்ளது. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் தமிழ் அரசியல் தலைவர்கள் என்னதான் அரசியல் சித்தாந்தங்களைப் பேசினாலும் அவர்களின் ஈகோவும் அரசியல் அபிலாசைகளுமே ஒருமையாக ஒற்றுமையாக சிந்திக்கவோ செயல்பட முடியாமல் நடந்து கொள்கின்றனர். சிங்கள அரசியல் இராஜதந்திரத்தின் ஊது குழல்களாகவோ அவர்களின் அபிலாசைகளுக்கு ஏற்ப நடந்து கொள்பவர்களாகவோ செயல்படுகிறார்கள் என்ற சந்தேகத்தை இந்த தமிழ் அரசியல் தலைமைகள் ஏற்படுத்தியுள்ளன. தந்தை செல்வா தனது இறுதிக் கட்டத்தில் தமிழ் மக்களை இனி இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியது சரியோ என்று தோன்றுகிறது.