இலங்கை மீண்டும் முடக்க நிலைக்குச் செல்லும் அபாயம். கொரோனாத் தொற்று அதிர்ச்சி நிலை ; ஒரே நாளில் 300பேர் .

இலங்கை . July, 12 2020

news-details

இலங்கை மீண்டும் முடக்க நிலைக்குச் செல்லும் அபாயம்.
கொரோனாத் தொற்று அதிர்ச்சி நிலை ; ஒரே நாளில் 300பேர் .

இலங்கையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தேர்தலை நோக்கி மக்களும் அரசியல்வாதிகளும் அலைமோதும் நிலையில் அபாய நெருக்கடிக்குள் நாடு செல்லும் நிலை தோன்றியுள்ளது. தற்போது திடீரென ஒரேநாளில் 300 பேர்களுடைய கொரோனாத் தொற்றுப் பதிவான நிலையில், இலங்கையில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்ற அரச ஊடகங்களில் தகவல்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது. பாராளுமன்றத்திக்கான தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இலங்கை கொரோனா விடயத்தில் இப்பொழுதுதான் அபாய கட்டத்தை எட் டிக்கொண்டிருக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளையில் வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனாத் தொற்று அதிகரிக்கும் நிலை தோன்றியுள்ளது என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது. இதனால் பலத்த கட்டுப்பாடுகளை அமுல் படுத்தும் நிலைக்கு சுகாதார அதிகாரிகளும் போலீசாரும் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அரச பதிவுகளின்படி 2454 பேர் என்பதும் பலியானோர் 11 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.