இராணுவத்தினரின் கெடுபிடிகளையும் மீறி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தமிழ் மக்கள் முள்ளிவாய் க்கால் நினைவு. கனடாவிலும் அனுசரிப்பு.

இலங்கை . May, 22 2020

news-details

இராணுவத்தினரின் கெடுபிடிகளையும் மீறி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தமிழ் மக்கள் முள்ளிவாய் க்கால் நினைவு. கனடாவிலும் அனுசரிப்பு.

19/5/2020: ஈழத்தின் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் சமூக இடைவெளிகளைக் கடைபிடித்து முள்ளிவாய்க்கால் நினைவை முன்னெடுத்தனர். அங்கு சில இடங்களில் கொரோனாவை காரணமாகக் காட்டி முள்ளிவாய்க்கால் நினைவு ஏற்பாடுகளுக்கு பாதுகாப்புத்துறை தடை விதிக்க முற்பட்டது. இருந்தாலும் தாம் சுகாதாரத் துறையின் செயல்விதி முறைகளுக்கு இணங்க முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்போம் என்ற உறுதிமொழியை ஏற்பாட்டாளர்கள் வழங்கியதைத் தொடர்ந்து இந்த நினைவை மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் அனுமதித்தனர்.
தாயக்கத்துக்கு வெளியே பலவேறு நாடுகளிலும் அந்தந்த பகுதிகளின் சூழ்நிலைகளுக்கேற்ப தீபச் சுடர் ஏந்தியும் ஆலயங்களில் அருச்சனை செய்தும் பிரார்த்தனைகள் செய்தும் முள்ளிவாய்க்கால் நினைவை மேற்கொண்டார்கள். கனடாவிலும் குறிப்பாக இத்தகைய வழிகளில் முள்ளிவாய்க்கால் நினைவு முன்னெடுக்கப்பட்டது . ரொறொன்றோவில் பொது இடத்தில் மக்கள் கூடி இந்த நினைவை முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.