இலங்கையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கிறது. இதுவரை 588 ஆக உயர்வு. 180 கடற்படையினரும் 53 சிறுவர்களும் பாதிப்பு.

இலங்கை . April, 29 2020

news-details

இலங்கையில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கிறது. இதுவரை 588 ஆக உயர்வு. 180 கடற்படையினரும் 53 சிறுவர்களும் பாதிப்பு.

இலங்கையில் 28/4/2020 காலைநேர நிலவரப்படி கொரோனா தோற்றாளர்கள் தொகை சடுதியாக உயர்வடைந்து கொண்டு வருகின்றது. இதுவரை 588 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8/4/2020 இல் 189 தோற்றாளர்களுடனும் 7 பேர் மரணத்துடனும் இருந்த நிலைமை மாறி, ஊரடங்கும் கடுமையான கட்டுப்பாடுகளும் முன்னெடுத்த நிலையில் புதிய தொற்றுகள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. இன்றுவரை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் எவரும் கொரோனாத் தொற்றுக்கு ஆளாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.