தமிழர்கள் இலக்கு வைக்கப்படலாம் அவதானம் உறவுகளே!

இலங்கை . April, 21 2019

news-details

அவதானம் உறவுகளே!!

இன்று கொழும்பில் பல இடங்களில் சந்தேகத்தின் பெயரில் பல தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் சந்தேகத்தின் பெயரில் விசேட குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை (SFT) ஆகியோரினால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் அபாய நிலை தோன்றியுள்ளது.

கொழும்பில் இன்று மூன்று இடங்களில் குண்டு வெடிப்பை தொடர்ந்து விசேட அதிரடிப்படையின் (special task force-STF) தேடுதல் வேட்டை தீவிரமாகி உள்ளது. சந்தேக நபர்கள் எனும் பெயரில் பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டும் நிலை காணப்படும்.

ஆகவே இங்கு குறிப்பாக தமிழர்கள் இலக்கு வைக்கப்படலாம். ஆகவே மேல் மாகாணம் கொழும்பு பகுதிக்கு தமது தேவை நிமிர்ந்தம் சென்ற எமது தமிழ் உறவகளை அவதானமாக இருக்கும்படி கூறுங்கள்.

தற்போதும் இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் உள்ளது என்பதை இங்கு குறிப்பிடத்தக்கது. சந்தேகத்தின் பெயரில் கைது செய்தாலும் சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதி மன்றில் வழக்கு பதிவு செய்தால் பின்னர் வழக்கு முடியும் வரை நீதி மாவட்ட/ நீதாவான் நீதி மன்றில் பிணை கூட கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் தகவல் உங்கள் உறவினரிடமும் சென்றடைய தவறாது அனைவருக்கும் பகிருங்கள்.