இலங்கை தேவாலய குண்டுவெடிப்புக்களில் 50 இற்கு மேற்பட்டவர்கள் பலி

இலங்கை . April, 21 2019

news-details

இலங்கையிலுள்ள தேவாயலங்கள் நட்சத்திர விடுதிகளில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட இலங்கையின் மூன்று தேவாயங்களிலும் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகள் மூன்றிலுமாக இலங்கையில் ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று உதிர்த்த ஞாயிறு கொண்டாடப்பட்டுவரும் நிலையில் இக் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பில் செபஸ்ரியான் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயம் என்பவற்றிலேயே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

அதேவேளை கொழும்பில் பிரமலமான ஐந்து நட்சத்திர விடுதிகளான
சங்கர்லால் மற்றும் சினமைன் கிராண்ட், கொழும்பு கிங்க்ஸ் பெரி ஹோட்டலிலும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.