நியூசிலாந்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் - இந்திய அணியில் டோனிக்கு இடம்

விளையாட்டு . January, 01 2019

news-details

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அதன்பின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெறாத எம்எஸ் டோனி, இந்த தொடரில் இடம்பிடித்துள்ளார். இதனால் டோனியின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்தது என்ற யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது தேர்வுக்குழு.

நியூசிலாந்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. விராட் கோலி, 2. கேஎல் ராகுல், 3. ஷிகர் தவான், 4. ரிஷப் பந்த், 5. தினேஷ் கார்த்திக், 6. கேதர் ஜாதவ், 7. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்), 8. ஹர்திக் பாண்டியா, 9. குருணால் பாண்டியா, 10. குல்தீப் யாதவ், 11. சாஹல், 12. புவனேஸ்வர் குமார், 13. பும்ரா, 14. கலீல் அஹமது, 15. ரோகித் சர்மா.