விளையாட்டு . April, 17 2019
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
2019-க்கான உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் என இரண்டு தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை தினேஷ் கார்த்திக் திறமையாக வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டுவிட்டரில், உலக கோப்பை அணியில் இடம்பிடித்ததற்கு வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக், நீங்கள் நிச்சயம் எங்களை பெருமைப்படுத்துவீர்கள் என தெரியும் என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா அணியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது, 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் விளையாடவுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
அதே போல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கியும் தினேஷ் கார்த்திகுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இப்படி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்