பேட்மிண்டன் தரவரிசை: 3-வது இடத்திற்கு முன்னேறினார் பிவி சிந்து

விளையாட்டு . January, 01 2019

news-details

சீனாவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப் போட்டியில் நொசோமி ஒகுஹாராவை 21-19, 21-17 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக உலக பேட்மிண்டன் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிவி சிந்துவால், வெற்றி வாகை சூட முடியாமல் திணறி வந்தார். தற்போது இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சாம்பியன் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் உலக பேட்மிண்டன் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.