உடல் எடையை குறைக்க ஆயுர்வேத டீ

வாழ்வியல் . January, 01 2019

news-details

கொழுப்பு, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த ஆயுர்வேத டீயை பருகலாம்.

தேவையான பொருட்கள் :

சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 7
இஞ்சி - 2 துண்டு
பட்டை - 2 இன்ச்
தண்ணீர் - 1 லிட்டர்
கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு


செய்முறை :

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு, கிராம்பு, இஞ்சி, பட்டை சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பின் 10 நிமிடம் கழித்து, வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய டீயுடன் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும்.