இந்தியாவில் பெற்றோரை பட்டினிபோட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அரக்க குணம் கொண்ட இளம் தம்பதியர் கைது. 

இந்தியா . June, 11 2021

news-details

இந்தியாவில் பெற்றோரை பட்டினிபோட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அரக்க குணம் கொண்ட இளம் தம்பதியர் கைது. 


iTamilWorld: 10/6/2021:  இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் சூர்ஜா பேட்டை மாவட்டத்தில் உள்ள தும்மகுடம் என்ற கிராமத்தில்,  பெற்றோரை பட்டினிபோட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் ஒரு தம்பதியை போலீஸார் கடந்த வாரம் கைதுசெய்துள்ளனர். விசாரணையின் போது அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.   ராமச்சந்திர ரெட்டி என்பவருக்கு  90 வயது, அவரது மனைவி  அனுசூயம்மாவுக்கு 80 வயது. அவர்களுக்கு  ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.  ராமச்சந்திர ரெட்டி கடுமையாக உழைத்து நிறைய சொத்து சேர்த்தார். 40 ஏக்கர் நிலமும் அதில் அடங்கும். அவருக்கு வயதாகிவிட்டதால், தனது சொத்தை இரு மகன்களுக்கும் சமமாக பிரித்துக்கொடுத்தார். வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்க வேண்டிய மகன்கள் அவர்களை ஒவ்வொரு மாதமும் மாறிமாறி ஒப்பந்த முறையில் கவனித்து வந்தனர். இவரது இளைய மகன் இறந்ததால், மருமகள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மூத்த மகனின் முறை வந்ததும் மூத்த மகனும் அவனது மனைவியும் இவர்களை கொலை செய்யத்  திட்டம்  தீட்டியுள்ளனர். இவர்கள் இருவரையும் வீட்டிற்கு  பின்புறம் ஒரு தகரக் கொட்டகையில் தங்க வைத்துள்ளனர். வெய்யில் கொடுமையால் அவதிப் பட்டார்கள். மேலும் அவர்களுக்கு உணவு கொடுப்பதை  நிறுத்திப்  பட்டினி போட்டார்கள். அதன் காரணமாக அவர்கள் மரணத்தைத் தழுவினார்கள். பெற்ற பிள்ளையே பெற்றோரை பட்டினி போட்டு கொலை செய்யுமளவுக்கு கொடூர அரக்கர்களாக மாறியுள்ளனர்  என்ற செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.