இந்தியாவில் கொரோனாப் பேரழிவுக்கு மோடி தான் காரணம்! சர்வதேச ஊடகங்கள் குற்றச்சாட்டு.

இந்தியா . May, 18 2021

news-details

இந்தியாவில் கொரோனாப் பேரழிவுக்கு மோடி தான் காரணம்! சர்வதேச ஊடகங்கள் குற்றச்சாட்டு.iTamilWorld: 17/5/2021: இந்தியாவில் பெருபாலான மாநிலங்கள் நகரங்களில் கொரோனாத் தொற்றுகளும் மரணங்களும் கணக்கு வழக்கின்றிப் பெருகி வருகின்றன. திரும்பிய திசைகளிலெல்லாம் மரணத்தின் கூக்குரல் ஒலித்த வண்ணமுள்ளன. நூதனமான முறையில் கங்கையில் பிணங்கள் மிதந்துவருகின்றன. ஓக்ஸிஜன் படுக்கைக்காக மனிதர்களும், மரணத்தின் குழிக்காக உயிரற்ற உடல்களும் நாட் கணக்கில் காத்திருக்க வேண்டியிருகிறது. இந்தியாவின் உருமாறிய கொரோனா வைரஸ் 44 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது என்று அச்சம் தெரிவித்திருக்கும் பெரும்பாலான சர்வதேச ஊடகங்கள், இத்தகைய சூழ்நிலைக்கெல்லாம் மோடி அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் தான் காரணம் என்று இந்திய அரசின் மீதும் பிரதமர் மோடியின் மீதும் குற்றம் சாட்டியுள்ளன.
மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் வெறும் அரசியலை லாபங்களுக்காக தேர்தல்களை நடத்தியது, கும்பமேளாவுக்கு அனுமதி வழங்கியமை, கொரோனா கட்டுப்பாடுகளை நெறிப்படுத்தாமல் நீக்குப்போக்காக நடந்து கொண்டமை போன்ற மோடி அரசின் முறைகேடான நடவடிக்கைகள் தான் காரணம் என்று குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்திய நீதித்துறையும் அரசின் அலசியப் போக்குகளைக் கண்டித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.