இந்தியாவில் கொரோனா  இரண்டாவது அலை காரணமாக  அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் .தேசிய அளவில் பொது முடக்கத்தை அறிவிக்க பிரதமர் தயக்கம். அதிகாரிகள் அழுத்தம். அமெரிக்காவும் ஆலோசனை 

இந்தியா . May, 06 2021

news-details

இந்தியாவில் கொரோனா  இரண்டாவது அலை காரணமாக  அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் .தேசிய அளவில் பொது முடக்கத்தை அறிவிக்க பிரதமர் தயக்கம். அதிகாரிகள் அழுத்தம். அமெரிக்காவும் ஆலோசனை 


iTamilWorld: 6/5/2021:  முதலாவது அலையின் பின் தணிந்திருத்த கொரோனா தொற்று இந்திய அரசின தவறான நிர்வாகம் காரணமாக தற்போது ஏற்பட்டிருக்கும் இரண்டாவது அலையில் வரலாறு காணாத  தொற்றுகளும் கொத்துக்கொத்தாக மக்கள் பலியாவதும் உலகம் அறிந்த செய்தி. இந்த நிலையில்  உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய அளவில் ஒரு பொது முடக்கத்தை அறிவிக்கக் கோரிப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது நாடு தழுவிய முடக்கத்துக்கு மத்திய அரசு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
 இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாயன்று, "கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கான ஒரே வழி முழுமையான முடக்கமேயாகும் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் சில மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் மே 15 வரை ஒரு சில முடங்கங்களை  அறிவித்துள்ளன. அதே நேரத்தில் அமெரிக்காவின் தொற்று நோயியல் நிபுணரான டாக்டர் அந்தோனியோ பவுசி யும்  இந்தியாவுக்கு இப்பொழுது ஒரு பொதுமுடக்கம் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.