தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம்; 234 தொகுதிகளில் 158 இடங்களில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு  ஆட்சியைக் கைப்பற்றுகிறது தி மு க கூட்டணி: முதல் முறை முதல்வராகப் பதவி ஏற்கிறார் மு க ஸ்டாலின் .

இந்தியா . May, 03 2021

news-details

தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம்; 234 தொகுதிகளில் 158 இடங்களில் வென்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு  ஆட்சியைக் கைப்பற்றுகிறது தி மு க கூட்டணி: முதல் முறை முதல்வராகப் பதவி ஏற்கிறார் மு க ஸ்டாலின் .


iTamilWorld: 3/5/2021:   கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.  கொரோனா பரவலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் எண்ணும் பணி  மே மாதம்  2ம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது . மேற்படி தேர்தல் முடிவுகளின்படி 126 தொகுதிகளில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது. தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்றது. முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் மு கருணாநிதியின் மகன் தற்போது தி மு க வின் தலைவர்  மு.க.ஸ்டாலின்அடுத்த தமிழ்நாட்டின்  முதலமைச்சராக முதல் முறை பதவியேற்கவிருக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையிலான அ.தி.மு.க  66 இடங்களிலும்,   அ.தி.மு.ககூட்டணி 76 இடங்களையும்  கைப்பற்றியது. இதன் மூலம் 2 தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அமைச்சர் சி.வி. சண்முகம், ஜெயகுமார், திருச்சி நடராஜன் உள்பட 11 பேர் தோல்வியடைந்துள்ளனர்.
அத்துடன் மக்கள் நீதி  மய்யத்தின்  தலைவர் கமலஹாசன் உட்பட அக்கட்சியில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி. நாம்  தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உட்பட அனைவரும் தோல்வி. விஜயகாந்தின் தே மு தி க வும் பலத்த தோல்வி என்பது தேர்தல் நிலவரங்கள் ஆகும்.