கொரோனாப் பேரழிவின் விளிம்பில் இந்தியா; இந்திய அரசின் அலட்ச்சியம்  காரணமா? உலக நாடுகளின் உதவியை எதிர்பார்க்கும் இந்தியா.

இந்தியா . April, 26 2021

news-details

கொரோனாப் பேரழிவின் விளிம்பில் இந்தியா; இந்திய அரசின் அலட்ச்சியம்  காரணமா? உலக நாடுகளின் உதவியை எதிர்பார்க்கும் இந்தியா.

iTamilWorld: 26/4/2021: இன்று திங்கட்கிழமை வரையும் கடந்த ஒருவாரமாக சராசரி கொரோனாத் தொற்றாளர்களின் 3 லட்ஷமாக உள்ளது. மரணிப்போர் தொகை 2000 முதல் 3000 வரையாக உள்ளது. கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் இடமின்றியும் முறையான வைத்தியமுமின்றி மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். நோயாளிகளுக்கு பிராணவாயுவான ஆக்சிசன் இல்லாமல் அநியாயமாக மக்கள் மடிந்துகொண்டிருக்கின்றனர். மயானங்களில்  இறந்தவர்களின்  உடலை தகனம் செய்யக்கூட இடமின்றி உறவினர்கள் தவிக்கின்றனர். இந்த பேரிடர்களுக்கு இந்திய அரசின் மெத்தனப்போக்கும் அலட்சியமான நடவடிக்கைகளும் தான்  காரணமென்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் இந்திய அரசு கட்டுப்பாடுகளைத்  தளர்த்தி மாநிலங்களில் தேர்தல்களை நடத்தியதும் கும்பமேளாவுக்கு அனுமதி வழங்கியமையும் தான்  காரணம்.