இந்தியா . January, 29 2021
தாம் பெற்ற மகள்களையே நரபலி கொடுத்த பெற்றார்; இந்தியாவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்.
iTamilWorld: 28/1/2021: இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில், தாம் பெற்ற இரண்டு பெண் பிள்ளைகளையும் பெற்றோர் இருவரும் இணைந்து இன்று நரபலி கொடுத்த கொடுமை நாடகம் நடந்தேறியிருக்கிறது. தங்கள் இரு பிள்ளைகளுக்குள்ளும் கேட்ட ஆவிகள் குடிபுகுந்து விட்டன என்றும் அவர்களை நரபலி கொடுத்தால் தான் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு சந்தோசமாக வாழமுடியும் என்ற முரட்டுத் தனமான நபிக்கையை வைத்து நடந்தனர். தந்தை தாய் இருவரையும் உடனடியாகக் கைது செய்த போலீசார் சிறையில் அடைந்தனர் . பிரேத பரிசோதனைக்குப் பின் தந்தையை மட்டும் அழைத்து வந்து சடலங்களுக்கு தீ மூட்டினர். தந்தையான புருசோத்தம் அங்குள்ள மதனப்பள்ளி ஒன்றின் துணை முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.