இந்தியா . January, 03 2021
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி வெற்றிகரமான செயல்பாட்டில்: இந்திய அரசு அனுமதி
iTamilWorld: அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் கோவிட் -19 ற்கான தடுப்பூசிகளான பைசர் மற்றும் மடோனா ஆகியவற்றின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் ஒஸ்ப்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராசெனிக்கா நிறுவனமும் இணைந்து இந்தியாவிலுள்ள சீரம் நிறுவனதின் தயாரிப்பில் தயாரான கோவிட்ஷீல்டு தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவத்துறையின் சிபாரிசின் பேரில் இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே சீரம் நிறுவனம் 50 மில்லியன் தடுப்பூசிகளைத் தயாரித்து தயாராக வைத்துள்ளது. இதே நேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவக்சின் என்ற தடுப்பூசியும் அவசரகால பயன்பாட்டுக்குப் பரிந்துரை செய்யப்படுள்ளது . தற்போது பரிசோதனை முறையில் இந்தியாவில் மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது .