இந்திய அரசின் செயலால் வெறுப்படைந்த விவசாயிகள் போராட்டம் 2 வாரமாகத் தொடர்கிறது.

இந்தியா . December, 13 2020

news-details

இந்திய அரசின் செயலால் வெறுப்படைந்த விவசாயிகள் போராட்டம் 2 வாரமாகத் தொடர்கிறது.

iTamilWorld: 13/12/2020:
அண்மையில் இந்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் விவசாயிகள் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள் அரசின் குறித்த சட்டங்களுக்கெதிராக நடத்திவரும் போராட்டம் 14 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற இந்திய அரசு நிராகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு மக்களும் ஊடகங்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன் குறிப்பிட்ட சில விவசாயிகள் சங்கங்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் தேவைப்படும் பொருத்தமான திருத்தங்களை சரியான விபரங்களுடன் சுட்டிக்காட்டினால் அதுபற்றி ஆலோசித்து திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.