அப்துல் கலாம் வேடத்தில் நடித்தவர் தனது நடிப்பைப் பார்க்காமலே இறந்த சோகம்.

இந்தியா . November, 20 2020

news-details

அப்துல் கலாம் வேடத்தில் நடித்தவர் தனது நடிப்பைப் பார்க்காமலே இறந்த சோகம்.

iTamilWorld: 18/11/2020:
இந்தியாவில் தமிழ்நாடு திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் மைதீன் என்பவர். இவர் சரியாக முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாமைப் போன்ற சாயலில் இருந்ததால் உடுமலை கலாம் என்றும் அழைக்கப் பட்டு பிரபலமடைந்தார். இவர் அண்மையில் வெளியான சூரரைப் போற்று என்ற உண்மைக் கதையை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் அப்துல் கலாமாக நடித்திருந்தார்.

இவர், தான் அப்துல் கலாம் வேடத்தில் நடித்த படத்தைத் திரையில் பார்ப்பதற்கு வெகு ஆவலாக இருந்தார். இந்தநிலையில், இவர் திடீரென மரணமாகியது அவரது குடும்ப வட்டாரங்களில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஒரு நிறம் தீட்டும்(பெயின்ட் ) தொழிலாளியாக இருந்த போதும் தந்து ஏழ்மை நிலையிலும் அப்துல் கலாமினுடைய கொள்கைகளைப் பரப்புவதில் ஈடுபட்டார்.