இந்திய பாகிஸ்தான் எல்லையில் மோதல் ; பொதுமக்கள் உட்பட 14 பேர் பலி

இந்தியா . November, 14 2020

news-details

இந்திய பாகிஸ்தான் எல்லையில் மோதல் ; பொதுமக்கள் உட்பட 14 பேர் பலி

iTamilWorld;14/11/2020: இந்திய பாகிஸ்தானிய ஜம்மு காஸ்மீர் எல்லைப் பகுதியில் இருநாட்டுப் படையினரிடையே துப்பாக்கி வேட்டுகள் பரிமாறப்பட்டுள்ளன. இதில் இருதரப்பிலும் பொதுமக்கள் உட்பட 14 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை நடைபெறுவதற்கு முதல் நாள் பாகிஸ்தான் தரப்பு இராணுவத்தினர் இந்திய தரப்பினர்மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர் என்றும் அதனைத் தொடர்ந்து இந்திய தரப்பினர் எதிர்த்தாக்குதல் மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய படையினரின் பலத்த தாக்குதலினால் பாகிஸ்த்தானில் உள்ள கட்டுமானக் குடியிருப்புகள், எரிபொருள் , ஆயுதக்கிடங்கு மற்றும் தீவிரவாதிகளின் முகாம்களும் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தரப்பில் மூன்று படையினரும் மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் நான்கு படையினரும் நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டதாகவும் 23 பேர் காயமடைத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டை மீறியதாக பரஸ்பரம் இருதரப்பும் குற்றம்சாட்டுகின்றனர்.