இந்தியாவில் ஒரு லட்சம் (100,000) மரணங்கள்; கட்டுப்பாட்டை இழந்த தொற்றுகளும் மரணங்களும் .

இந்தியா . October, 03 2020

news-details

இந்தியாவில் ஒரு லட்சம் (100,000) மரணங்கள்; கட்டுப்பாட்டை இழந்த தொற்றுகளும் மரணங்களும் .

கொரோனாத் தொற்றுகளும் மரணங்களும் ஆரம்பத்ததில் 25வது இடத்திற்குப் பின்னால் இருந்த இந்தியா தற்போது உலக அளவில் அமெரிக்கா பிரேசிலை அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது. அக்டோபர் 3ம் திகதி நிலவரப்படி இந்தியாவின் கொரோனாத் தொற்று மரணங்கள் ஒரு லட்ச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 2020 யிலேயே மிகவும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 1,100 பேர் வீதம் மரணங்கள் சம்பவித்துள்ளன.
என்னதான் இந்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும் அவற்றை ஒழுங்காக மதிக்காத மக்களும் சாதாரண ஏழை மக்கள் , கூலித் தொழிலாளர்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு அரசினதும் அரசியல்வாதிகளின் அலட்சியமான, பொறுப்பற்ற செயற்திட்டங்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மிக நெருக்கமான சுகாதாரமற்ற மக்கள் குடிசன நெருக்கமும் இன்னொரு காரணமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
இந்தியாவின் பணக்கார மாநிலக்களில் ஒன்றான மகாராஷ்ராவில் பத்து இலட்ச்சத்துக்கு(1,000,000) மேற்பட்ட தொற்றுகளும் முப்பத்தாறாயிரத்துக்கு (36,000) மேற்பட்ட மரணங்களும் ஏற்பட்டுள்ளன.