இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையில் முன்னேற்றம். பிரிட்டிஷ் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி பின்னடைவு .

இந்தியா . September, 15 2020

news-details

இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனையில் முன்னேற்றம். பிரிட்டிஷ் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி பின்னடைவு .

இந்தியயாவிலுள்ள பாரத் பயோடெக் மருந்து நிறுவனத்தின் கோவாக்சின் என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்கப் பட்டுள்ள கோவிஷீல்ட் என்ற தடுப்பூசியின் மனித பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் கோவாக்சின் இரண்டாவது கட்டப் பரிசோதனையான மனிதர்கள் மீது செய்யும் பரிசோதனைக்குள் நுழைந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவத்தின் இந்த மருந்தைப் பரிசோதனை செய்வதற்காக தமிழகத்தில் சென்னைக்கு அருகே உள்ள காட்டாங்குளத்தூர் என்ற இடத்திலுள்ள எஸ். ஆர். எம். மருத்துவக் கல்லூரி இந்தியாவிலுள்ள 12 நிறுவனங்களைத் தெரிவுசெய்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.