சீனா பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையில் இந்திய போர் பலம் அதிகரிப்பு. புதிய ரஃபேல் போர் விமானகள் இந்திய இராணுவத்தின் வசம்.

இந்தியா . September, 11 2020

news-details

சீனா பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையில் இந்திய போர் பலம் அதிகரிப்பு. புதிய ரஃபேல் போர் விமானகள் இந்திய இராணுவத்தின் வசம்.

இந்தியவுடன் பகை கொண்ட சீனா மற்றும் பாகிஸ்தானை அச்சுறுத்தும் வகையில் இந்திய இராணுவம் தன்னுடைய பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் உள்ள போர் விமானங்களை ஆற்றலை விடப் பலமடங்கு ஆற்றல் மிக்க 36 ரஃபேல் போர் விமானங்களை இந்திய தனது இராணுவத்துடன் இணைத்துள்ளது. இந்த விமானங்களில் ஒவ்வொன்றும் ஒரே நேரத்தில் 5 ஏவுகணைகளைத் தாங்கி சென்று 5 இலக்குகளைத் தாக்கும் வல்லமை உள்ளது. அதேவேளையில் வானில் இந்தியவைத் தாக்கவரும் எதிரிநாட்டு விமானங்களை வானில் வைத்தே சுட்டுவீழ்த்தும் ஆற்றலும் கொண்டவை இந்த விமானங்கள். ஏற்கனவே இந்திய பல்வேறு தொழில்நுட்ப ஏவுகணைகளைப் பரிசோதனை செய்து தன்னைப் பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.