பிரணாப் முகர்ஜி காலமானார்.

இந்தியா . September, 02 2020

news-details

பிரணாப் முகர்ஜி காலமானார்.

இந்தியக் குடியரசின் முன்னாள் குடியரசுத் தலைவர் டெல்லி இராணுவ முகாமில் காலமானார். இந்தியாவின் தலைசிறந்த அரசியல் வாதியாகவும் பொருளாதார நிபுணராகவும் இருந்தார். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார் என்பதும் அதற்கு முன்பெல்லாம் ஆசிரியராகவும் பத்திரிகையாளராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர் இந்தியாவின் பல வங்கிகளின் குழுக்களிலும் பங்கு வகித்துள்ளார். மேலும் உலக வங்கியின் இயக்குனர் குழு உறுப்பினராகவும் மற்றும் மக்களவை கட்சிக்குழுத் தலைவராகவும் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.