பிரபல பாடகர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் குணமடைய பலகோடி மக்கள் பிரார்த்தனை; சிகிக்சை தொடர்கிறது .

இந்தியா . August, 26 2020

news-details

பிரபல பாடகர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் குணமடைய பலகோடி மக்கள் பிரார்த்தனை; சிகிக்சை தொடர்கிறது .
பிரபல பாடகர், பத்மஸ்ரீ, பத்மபூஷன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் குணமடைய வேண்டி உலகெங்கும் உள்ள பலகோடி மக்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிட்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையின் சேவைகள் பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், அவரது மருத்துவ நிலைமை சீராக உள்ளதாகவும், அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.