விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா . January, 01 2019

news-details

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முத்தலாக் மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள் மற்றும் 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.