சீனா இந்தியா போர் பதட்டம். எல்லைகளில் முறுகல் நிலை. இருதரப்பு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இணக்கம்.

இந்தியா . June, 07 2020

news-details

சீனா இந்தியா போர் பதட்டம். எல்லைகளில் முறுகல் நிலை. இருதரப்பு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இணக்கம்.

சீனா இந்திய எல்லைகளில் தன்னுடைய படைகளைக் குவித்து அண்மைக் காலமாக போர் ஒத்திகைகளில் ஈடுபட்டு வந்தது. பதிலுக்கு இந்தியாவும் நானும் சளைத்தவன் இல்லை என்று தனது படைகளைக் குவித்து உசாராக இருந்தது. இந்த நேரத்தில் அமெரிக்கா சீனா இந்தியாவுக்கு இடையில் சமரசம் செய்து வைக்கத் தான் தயார் என்று அறிவித்தது. இதனைச் சீனா உடனடியாக நிராகரித்தது. தொடர்ந்து அமெரிக்கா இந்தச் சூழ்நிலையில், நட்பு நாடென்ற ரீதியில் இந்தியாவுக்கு உதவத் தன தயார் என்றது. அத்துடன் அமெரிக்காவில் நடைபெறவுள்ள கி 7 மாநாட்டை விரிவுபடுத்தி கி 10 ஆக ஆக்கி அதில் இந்தியாவையும் இணைக்க அமெரிக்க அதிபர் முயன்று வருகிறார். அதன் காரணமாக அந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அதனை இந்தியா ஏற்கக் கூடாது என்று சீனா இந்தியாவை மிரட்டியது . இவற்றின் எதிரொலியாகத்தான் சீனா இந்தியாவுடன் இத்தகைய கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றது. பின்னர் இந்தியவைச் சமாதானப் படுத்தும் முகமாக பேசித் தீர்க்கலாம் என்று இறங்கி வந்திருக்கிறது. தற்போதைய நிலையில் சீனா ஒரு போரை இந்தியா மீது தொடுக்குமானால் அது சீனாவுக்குத் தான் பாதகமாக முடியும் என்பது சர்வதேசக் கணிப்பீடு.