இந்தியா . April, 29 2020
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இனி உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு இந்தியா வசம்.
27/4/2020: 23;00; அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் Mike Pompeo அவர்களின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ்சிற்கு தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவுடன் இணைந்து உழைத்து வருவதாகக் கூறியுள்ளார். கடந்த 53 வருடங்களாக பலவிதமான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய இந்திய நிறுவனமான SERUM என்ற நிறுவனம் இந்த முயற்சியில் சில படிகள் முன்னேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் ஆண்டொன்றிக்கு 15 லட்சம் தடுப்பூசிகளைத் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் தயாரிப்பில் இந்தியா உலகத்தில் அதி முக்கிய இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மிக விரைவில் இந்தியா உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.