கனடாவில் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்!

கனடா . March, 25 2019

news-details

கனடாவில் படுகொலை விகிதம் கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

கனேடிய ஆய்வு நிறுவனம் ஒன்றினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வன்முறை கும்பல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடுகளின் அதிகரிப்பு காரணமாகவே படுகொலை விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டில் மாத்திரம் 800 இற்கும் மேற்பட்ட படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் படுகொலைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதற்காக கனடாவின் பல பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.