ஏயர் கனடா விமான சேவை இரத்து!

கனடா . February, 28 2019

news-details

வான்வழி பயணங்களை பாகிஸ்தான் மூடியுள்ள நிலையில் ஏயர் கனடா விமான சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரொறன்ரோவில் இருந்து பயணித்த விமானம் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து ஐரோப்பா சென்ற நிலையில் சுமார் 12 மணிநேரத்தின் பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளது.

இந்தநிலையில் வான்கூவரில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் விமானத்தை ஏயர் கனடா விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்தது.

மேலும் தற்காலிகமாக இந்தியாவிற்கான சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக ஏயர் கனடா விமான சேவை தெரிவித்துள்ளது.