கனடாவில் தொடரும் கடும் குளிர் எச்சரிக்கை-மக்கள் அவதானத்துடன் செயல்பட ஆலோனை!

கனடா . May, 24 2019

news-details

கனடாவில் நிலவி வரும் கடும் குளிரான காலநிலை காரணமாக மக்கள் அவதானத்துடன் செயல்பட கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக வடக்கு மானிடோபாவில் –51 அளவில் கடும் குளிரான காலநிலை நிலவும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஒட்டாவா காடினூ, கார்ன்வால், பிரச்காட்-ரஸ்ஸல், போன்ற பகுதிகளுக்கு மணிக்கு 80 கிலோ /மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலநிலை இன்று (செவ்வாய்க்கிழமை)வரை தொடரும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தக் காலநிலை பிற்பகல் வேளையில் குறைவடைய கூடிய சத்தியம் உள்ளதாகவும் எதிர்வு கூறிய அத்திணைக்களம், வரும் வாரங்களில் சாதாரண வெப்பநிலை தொடரும் என்றும் கூறியுள்ளது.

இதன் காரணமாக மக்களை வீடுகளில் இருக்குமாறும் வெளியில் செல்வதை அதிகம் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன், வாகனச் சாரதிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, எட்மன்டனின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கும் அல்பேர்ட்டா பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.