கனடாவில் சில பகுதிகளுக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை !

கனடா . February, 20 2019

news-details

மெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை, விடுக்கப்பட்டுள்ளதாக கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பகுதிகளில் பனிப் பொழிவு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரையில் பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனால், குறித்த பகுதியில் உள்ள மக்கள், அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அவதானத்துடன் செயல்படுத்து மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த நிலைமை புதன் கிழமை வரை நீழும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.