குழந்தைகள் மற்றும் குடும்ப சேவைகளில் மாற்றம் – கனேடிய பிரதமர் அறிவிப்பு!

கனடா . February, 02 2019

news-details

குழந்தைகள் மற்றும் குடும்ப சேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை, நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பழங்குடி சமூகத்தினருக்கு நன்மையளிக்கும் வகையிலான செயன்முறைகளே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் வாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மக்கள் எதிர்நோக்கலாம் என பிரதமர் கூறியுள்ளார்.