கியூபெக்கில் ஊரடங்கு அமூல்; ஒரு மாதத்துக்கு நடைமுறை;கட்டுப்பாட்டை மீறுவோருக்கு 1000 முதல் 6000 வரை அபராதம்.

கனடா . January, 07 2021

news-details

கியூபெக்கில் ஊரடங்கு அமூல்; ஒரு மாதத்துக்கு நடைமுறை;கட்டுப்பாட்டை மீறுவோருக்கு 1000 முதல் 6000 வரை அபராதம்.

iTamilWorld: 6/1/2021: எதிர்வரும் 9/1/2021 முதல் 8/2/2021 வரை கியூபெக் மாநிலத்தில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை கியூபெக் மாநில முதல்வர் பிரான்சுவா லெகோ இன்று நடத்திய ஊடக சந்திப்பின் பொது அறிவித்தார். இதில் முக்கியமாக இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது . இதன் மூலம் இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் யாரையும் போலீசார் மறித்து விசாரிக்கவும் அத்தியாவசியத் தேவையற்ற முறையில் வாகனத்தில் செல்வோருக்கு 1000 முதல் 6000 டொலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் மற்றும் மருந்துக்கடைகள் தவிர்ந்த எல்லா வர்த்தக நிலையங்களும் 8 மணிக்கு மேல் திறந்திருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளையில் வரும் 11ம் திகதி முதல் ஆரம்பப் பாடசாலைகளும் 18ம் முதல் உயர்கல்விப் பாடசாலைகளும் இயங்கத்தொடங்கும் என்றும் அதுவரை இணையவழியூடாக பாடசாலைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .