கனேடிய மக்களுக்கு ஆபத்து; தினசரி தொடரும் கோவிட் -19 அச்சுறுத்தல் .

கனடா . October, 26 2020

news-details

கனேடிய மக்களுக்கு ஆபத்து; தினசரி தொடரும் கோவிட் -19 அச்சுறுத்தல் .

கனடாவில் தற்போது சில வாரங்களாக அதிகரித்துவரும் கொரோனாத் தொற்றுகள் கனேடிய மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது கனேடிய சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தினசரித் தொற்றுகள் கனேடிய மக்கள் சமூகங்களிடையே அதிகமான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியது . அதுவும் நன்றி நவிலல்(Thanks Giving) கொண்டாட்டத்தின் பின்னர் தொற்றுகள் அதிகரித்து வருவது மக்கள் அரசின் எச்சரிக்கைகளை அலட்ச்சியம் செய்து வருவதையே சுட்டிக்காட்டுகிறது. கனேடிய அரசும், மாநில அரசுகளும் மக்களை எச்சரித்து வரும் நிலையிலும் கணிசமான மக்கள் அவற்றைப் பொருபட்படுத்தாமல் நடப்பது கவலைக்குரியது என்று சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி கனடாவில் தொற்றாளர்கள் மொத்த எண்ணிக்கை 216,104 ஆகவும் அவற்றில் கியூபெக்கில் 100,114 பேரும் ஒண்டாரியோவில் 70,373 பேருமாக அதிகமான தொற்றுகள் பதிவாகியுள்ளன என்பதும் மொத்தத் பலிகள் 9,946 ம் அவற்றில் அதிகமாக கியூபெக்கில் 6,132 பேரும் ஒண்டாரியோவில் 3,132 பேரும் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.