நோவா ஸ்கொட்டியாவில் பயங்கர தீவிபத்து : இறால் பண்ணை முற்றாக நாசம்:

கனடா . October, 18 2020

news-details

நோவா ஸ்கொட்டியாவில் பயங்கர தீவிபத்து : இறால் பண்ணை முற்றாக நாசம்:

நோவா ஸ்கொட்டியா மாநிலத்தில் மிடில் வெஸ்ட் பப்ணிக்கோ என்ற இடத்தில் உள்ள இறால் பண்ணை இனத்தெரியாதோரால் விசமத்தனமாக வைக்கப்பட்ட தீ அந்தப் பண்ணையையே முற்றாக நாசமாக்கியுள்ளது. இச் சம்பவத்தில் ஒருவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த தீ வைப்பு தொடர்பாக றோயல் மௌண்டன் போலீசாகிய (ஆர். சி. எம். பி.) தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஏற்கனவே அங்கு மீனவர்களுக்கும் பழங்குடியினருக்கும் இடையில் மோதல்கள் இருந்தன என்பதும் எதிரெதிர் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.