மாற்றுத் திறனாளிகள் விடயத்தில் லிபரல் அரசைச் சாடிய என். டி.பி. தலைவர் ஜக்மித் சிங் .

கனடா . October, 18 2020

news-details

மாற்றுத் திறனாளிகள் விடயத்தில் லிபரல் அரசைச் சாடிய என். டி.பி. தலைவர் ஜக்மித் சிங் .

ஆளும் லிபரல் அரசு கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் மேற்கொள்ளும் நிவாரணத் திட்டங்கள் விடயத்தில், கனடாவில் மாற்றுத் திறனாளிகளுடன் வாழும் கனேடியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக என். டி. பி. கட்சியின் தலைவர் ஜக்மித் சிங் குற்றம் சாட்டியுள்ளார் . அரசின் திட்டத்தில் அவசரகால வாழ்வாதார நிதிக் கொடுப்பனவுகள் திட்டத்தில் (சி. இ. ஆர். பி.(CERB)) பயன் பெறுவோர் வரையறையில் மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களில் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றார்.