196,114 கொரோனாத் தொற்றுப் பாதிப்பு. இன்றுமட்டும் கனடாவில் 2,215 தொற்றுகள். 165,000 நோயிலிருந்து மீண்டுள்ளனர் .

கனடா . October, 18 2020

news-details

196,114 கொரோனாத் தொற்றுப் பாதிப்பு. இன்றுமட்டும் கனடாவில் 2,215 தொற்றுகள். 165,000 நோயிலிருந்து மீண்டுள்ளனர் .

இன்றுமட்டும் கனடாவில் ஏற்பட்ட கொரோனாத் தொற்றுகள் 2,215 ஆக பதியப்பட்டுள்ளன. இவர்களில் 25 பேர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை கனடாவில் உள்ள மொத்தத் தொற்றுகள் 196,114 ஆக அதிகரித்துள்ளன. இதுவரை கனடாவில் ஏற்பட்ட மொத்தப் பலிகள் 9,746 ஆகும். இதுவரை 165,000 அதிகமானோர் கொரோனாத் தொற்றிலிருந்து குணமாகிவிட்டனர்.
ஒண்டாரியோ மாநில அரசின் அறிக்கையின்படி இன்று (17/10/2020) 805 தொற்றுகள் என்றும் 10 பேர் பலி என்றும் இதுவரை மொத்தத் தொற்றுகள் 63,713 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாநில அரசின் அறிக்கையின்படி இன்று கியூபெக்கில் 1,279 புதிய நோய்தொற்றுகளும் 15ற்கு மேற்பட்டோர் பலியானதாகவும், இதுவரை கியூபெக்கில் மொத்தத் தொற்றுகள் 92,297 ஆகவும் பலிகள் 6,032 ஆகவும் பதியப்பட்டுள்ளன.