கொரோனா வைரஸ் எதிர்கொள்ளும் ஆபத்து, ஆவிகள் தினத்தைக் கொண்டாட முனைப்பு; மருத்துவர்கள் எச்சரிக்கை.

கனடா . October, 09 2020

news-details

கொரோனா வைரஸ் எதிர்கொள்ளும் ஆபத்து, ஆவிகள் தினத்தைக் கொண்டாட முனைப்பு; மருத்துவர்கள் எச்சரிக்கை.

கனடா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக வீசிவரும் வேளையில் தற்போது கியூபெக் , ஒண்டாரியோ, பிரிடிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா ஆகிய மாநிலங்கள் அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. கியூபெக் மாநில முதல்வர் களியாட்ட விடுதிகள், உணவகங்களை மூடிய நிலையில் ஒண்டாரியோ முதல்வர் உணவகங்களையும் மூட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதே வேளையில் கனடாவிலும் மக்கள் கொரோனா விதிகளை அதாவது நோய்தொற்று உறுதியானவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தல் விதிகளைக் கடைபிடிக்காமையும் அவரை அரச நிர்வாகக் கட்டமைப்புகள் கவனத்திற் கொள்ளாமல் இருப்பதும் மேலும் பாடசாலைகளில் மாணவர்களில் பெருபாலானோர் கொரோனா வைரஸ்க்கு முன்பு எப்படி இருந்தார்களோ அதேபோன்று இப்பொழுதும் விதிகளை அலட்சியம் செய்து நடப்பதும் இவற்றை பாடசாலை நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் ஒண்டாரியோ மக்கள் ஆவிகள் தினத்தைக் கொண்டாடும் முனைப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் பொறுப்பற்ற தன்மையால் ஒண்டாரியோ பேரழிவின் விளிம்பில் இருக்கிறது என்று ஒண்டாரியோவின் தொற்று நோயியியல் நிபுணர் எச்சரித்திருக்கின்றார்.
இந்த வார நிலவரப்படி ஒண்டாரியோவிலுள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்கள் மீண்டும் நோய்த்தொற்றுகளையும் மரணங்களையும் கண்டிருப்பதானது மீண்டும் அச்ச அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒண்டாரியோ மாநிலத்தில் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் முதியோர் மரணங்கள் 19 என்றும் 50ற்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதே போல் அல்பேர்ட்டாவிலும் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் ஒரேநாளில் மட்டும் 5 முதியோர் மரணமடைத்ததாகவும் தெரிவிக்கப் படுகிறது.