கனடா . September, 28 2020
மறைந்த பாடும் நிலா எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு iTamilWorld இன் இறுதி வணக்கம்.
இசை உலகின் அரசன் பாடும் நிலா பத்மஸ்ரீ , பத்மபூஷன் டாக்டர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவுக்கு iTamilWorld தனது இறுதி வணக்கத்தைத் தெரிவிக்கிறது. தனது இனிய குரலால் 40,000 மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடிய எஸ் பி பி அவர்கள் நான்கு மொழிகளில் ஆறு தேசிய விருதுகளைப் பெற்றவர். அவர் பாடகர் மட்டுமன்றி திரைப்பட இயக்குனராகவும் , இசை அமைப்பாளராகவும் , சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகராகவும் வலம் வந்தவர். அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் உலகத் தமிழர்கள் அனைவரிடமும் நீங்கா நினைவுகளாக என்றென்றும் நிலைத்திருக்கும்.