கொரோனா இரண்டாவது அலை கனடாவின் நான்கு மாநிலங்களில் பாதிக்கத் தொடங்கிவிட்டது என பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவிப்பு.

கனடா . September, 25 2020

news-details

கொரோனா இரண்டாவது அலை கனடாவின் நான்கு மாநிலங்களில் பாதிக்கத் தொடங்கிவிட்டது என பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவிப்பு.

கனடாவில் ஒன்ராறியோ, கியூபெக் , பிரிடிஷ் கொலம்பியா மற்றும் ஆல்பர்ட்டா மாநிலங்களில் கொரோனா வைரஸ்(கோவிட் -19) இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கனடிய லிபரல் அரசின் அடுத்த ஆண்டிற்கான அரச நிர்வாகத்தின் கன்னி உரையை கனடாவின் முடிக்குரிய மகா இராணியார் எலிசபெத் மகாராணியின் பிரதிநிதியான கவர்னர் ஜெனரல் லூயிஸ் பயட்ரின் நிகழ்த்தியபின் நடைபெற்ற ஊடக சந்திப்பின் பொது இதனைத் தெரிவித்தார்.
முதியவர்களைத் தங்கள் பொறுப்பில் பராமரிப்பவர்களின் அலட்சியமான செயல்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவசர காலக் கொடுப்பனவுகள் வேறு ஒரு திட்டத்தின் கீழ் தொடரப்படும் என்றும் கனடியப் பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பொருளாதார மையங்களை எவ்வாறு தொடர்ந்து இயக்குவது என்பது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.