கனடாவின் முன்னாள் பிரதமர் (John Turner) ஜோன் ரோனேர் காலமானார்.

கனடா . September, 20 2020

news-details

கனடாவின் முன்னாள் பிரதமர் (John Turner) ஜோன் ரோனேர் காலமானார்.

கனடாவின் முன்னாள் பிரதமர்(John Turner) ஜோன் ரோனேர் தனது 91வது வயதில் இன்று காலமானார். இவர் கனடாவின் 17வது பிரதமர் ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டெம்பர் வரையுமே பிரதமர் பதவியில் இருந்தாலும் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்களின் தந்தை பியர் அலியேட் ரூடோ பிரதமராக இருந்த காலத்தில் நீதி மற்றும் நிதி அமைச்சுப் பொறுப்புகளில் இருந்துள்ளார். லிபெரல் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டு ஜோன் கிறிஸ்டியனை தோற்கடித்து தலைமைப் பதவிக்கு வந்தார், சொற்ப காலமே பிரதமராக இருந்தாலும் கனடிய அரசியலில் மிகவும் பிரபலியமானவராக அறியப்பட்டார்.