WE அறக் கட்டளை விவகாரங்களில் இருந்து தன்னை விடுவிக்க தவறியதற்காக கனடாப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மன்னிப்புக் கோரினார்.

கனடா . July, 17 2020

news-details

WE அறக் கட்டளை விவகாரங்களில் இருந்து தன்னை விடுவிக்க தவறியதற்காக கனடாப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ மன்னிப்புக் கோரினார்.

கோடை கால மாணவர்களின் மானியங்களை நிர்வகித்தல் தொடர்பாக WE அறக்கட்டளை சம்பந்தமான அமைச்சரவைக் கூட்டங்களில் தான் கலந்து கொண்டிருக்கக் கூடாது . அந்த வகையில் நான் தவறு செய்துவிட்டேன். அதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். எனது குடும்ப உறுப்பினர்கள் பங்கு கொண்டிருக்கும் இந்த அறக்கட்டளை செயல்பாடுகள் பற்றி எனக்குத் தெரியும். அனால் அதில் எனது தாயாருக்கும் சகோதரருக்கும் எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பதை நான் அறிந்திருக்கவில்லை . கிட்டத் தட்ட 3 மில்லியன் டொலர் பணம் அவர்களுக்கு வழங்கப்படத்தக்க குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்படுகிறது.