கனடாப் பிரதமரையும் கவனர் ஜெனரலையும் கொல்ல சதியா? ஆயுதத்துடன் வாகனத்தில் நுழைந்தவர் கைது.

கனடா . July, 03 2020

news-details

கனடாப் பிரதமரையும் கவனர் ஜெனரலையும் கொல்ல சதியா? ஆயுதத்துடன் வாகனத்தில் நுழைந்தவர் கைது.

கனடிய ஆயுதப்படை உறுப்பினர் ஒருவர் காரணமின்றி கனடாத் தலைநகரின் பிரதமர் மற்றும் கவனர் ஜெனரல் இல்லப் பகுதியான ரிடோ ஹோல் (Rideau Hall) இல் நுழைந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டார். இந்த நபர் கையில் ஆயுதம் ஏந்தி இருந்தார் என்றும் அந்த நேரத்தில் அங்கு பிரதமர் ஜஸ்டின் ரூடோ அவர்களோ கவர்னர் ஜெனரல் ஜூலி பயட் அவர்களோ இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நபரின் நோக்கம் என்னவென்பது இதுவரை தெரியவில்லை. போலீசார் குறிப்பிட்ட நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தபின் இரகசிய விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.