கனடாவிலும் இனவெறி ; வேதனையுடன் ஒப்புக்கொண்ட பிரதமர்.

கனடா . June, 15 2020

news-details

கனடாவிலும் இனவெறி ; வேதனையுடன் ஒப்புக்கொண்ட பிரதமர்.

மெரிக்காவில் இனவெறியாட்டம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் கனடாவிலும் இனவெறி தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கனடியப் பிரதமர் நிருபர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் , கனடாவில் பல்வேறு மட்டங்களிலும் இனத்துவேசம் இருப்பதாகவும் அதிலும் முக்கியமாக பாதுகாப்புப் படையினர் மத்தியிலும் இது உள்ளதாகவும் அடித்துக் கூறினார். அதனைத் தொடர்ந்து கனடிய றோயல் போலீஸ் அதிகாரியான பெண்மணி லக்கி(Lucki), அப்படி எந்த துவேஷ செயற்பாடுகள் தங்கள் தரப்பில் இல்லை என்று மறுத்ததும், அடுத்த சில நொடிகளில் ஒரு அதிர்ச்சி வீடியோ ஒன்று இணைய ஊடகங்களில் வெளியாகியது. அதில் அல்பேர்ட்டா(Alberta) மாநிலத்தில் ரகிம்ப் யினர் அங்குள்ள ஆதிக்குடிகளின் தலைவர் ஒருவரை மோசமாகத் தாக்கிக் கைது செய்யும் வீடியோ வெளியானது. ஏற்கனவே இப்படியான ஆதாரங்கள் வெளியாகிய வண்ணமுள்ளன. இதைப் பார்த்த பிரதமர் மேலும் அதிர்ச்சியடைந்தார். பாதுகாப்புத் தரப்பும் இத்தவறுகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். காவல் துறையில் சீர்திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் காவல்துறை அதிகாரியும் ஒப்புக்கொண்டனர்.