ஒண்ராரியோவில் Covid-19 புதிய தொற்றுகள் சமூகப்பரவல் மூலமாக ஏற்படுவதாக வைத்திய உயர் அதிகாரி குற்றசாட்டு.

கனடா . May, 10 2020

news-details

ஒண்ராரியோவில் Covid-19 புதிய தொற்றுகள் சமூகப்பரவல் மூலமாக ஏற்படுவதாக வைத்திய உயர் அதிகாரி குற்றசாட்டு.

ஒண்டாரியோ(Ontario) அண்மைய புதிய கொரோனாத் தொற்றுகள் சமூகப் பரவல் மூலமே ஏற்படுகிறது என்று வைத்திய உயர் அதிகாரி Dr. David Williams அவர்கள் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது குற்றம் சாட்டினார் . இன்று மட்டும் 477 பேர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் . இத் தொற்றுகளில் சுமார் 55% (வீதமான) நோய்த் தோற்றாளர்கள் சமூகப் பரவல் காரணமாக பாதிக்கப் பட்டவர்கள் ஆவர். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் நாம் இன்னும் முன்னேறவில்லையோ என்று தோன்றுகிறது. இக் குழப்பமான சூழ்நிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.