8 மில்லியன் (800,000) N95 சீன முகக் கவசங்களை கனடிய அரசு இடைநிறுத்தியுள்ளது.

கனடா . May, 10 2020

news-details

8 மில்லியன் (800,000) N95 சீன முகக் கவசங்களை கனடிய அரசு இடைநிறுத்தியுள்ளது.

மொன்றியலை(Montreal)த் தளமாகக் கொண்டியங்கும் ஒரு நிறுவனத்தினால் தயாரிப்பான சீனாவில் தயாரிக்கப்பட்ட N95 முகக்கவசங்களை கனடிய அரசு இடைநிறுத்தியுள்ளது. இந்நிறுவனத்திடம் கோரப்பட்ட 11 மில்லியன் முகக்கவசங்களில் ஒரு மில்லியன் முகக்கவசங்கள் மட்டும் கனடிய அரசின் தரக்குறிப்பீடுகளைப் பூர்த்தி செய்துள்ளதால் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன. மேலும் 1.6 மில்லியன் முகக்கவசங்கள் பரிசோதனையில் உள்ளன. மிகுதி 8 மில்லியன் கனடிய அரசின் தரநிர்ணயக் குறியீடுகளைப் பூர்த்தி செய்யாததால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடிய அரசின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.