கனடாவிலும் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் அதிக மரணங்கள். Pickering முதியோர் இல்லத்தில் மட்டும் 31 பேர் பலி.

கனடா . April, 24 2020

news-details

கனடாவிலும் முதியோர் பராமரிப்பு இல்லங்களில் அதிக மரணங்கள். Pickering முதியோர் இல்லத்தில் மட்டும் 31 பேர் பலி.


Orchard Villa என்ற ஓய்வூதிய முதியோர் இல்லத்தில் இன்று 21/4/2020 செவ்வாய்கிழமை மட்டும் கொரோனாவினால் 31 பேர் மரணமாகியுள்ளனர்.
98 குடியிருப்பாளர்களுடன் இயங்கும் இந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் 24 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இங்குள்ளவர்களுக்கு COVID-19 பரிசோதனை செய்ததில் 17 குடியிருப்பாளர்களும் 6 தொழிலாளர்களும் இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதிர்ச்சியூட்டும் வகையில் இன்று ஒரே நாளில் இந்த 31 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. பரிசோதனை முடிவுகள் முழுவதும் வெளிவராத நிலையில் இத் துர்ப்பாக்கிய மரணங்கள் நிகழ்ந்துள்ளன.