கனடாவில் கிடுகிடு என ஏறிய கொரோனாத் தொற்றும் மரணமும்; இதுவரை 23,318 தொற்றும் 653 மரணங்களும் : தமிழர்களும் விதிவிலக்கில்லை .

கனடா . April, 13 2020

news-details

கனடாவில் கிடுகிடு என ஏறிய கொரோனாத் தொற்றும் மரணமும்; இதுவரை 23,318 தொற்றும் 653 மரணங்களும் : தமிழர்களும் விதிவிலக்கில்லை .

கடந்த பெப்ரவரி 16ம் திகதி(February 16) வரை வெறும் 8 பேர் தொற்றும் பூச்சியம் மரணமாக இருந்த கொரோனா(COVID-19) சரியாக ஒரு மாதத்தில் மார்ச் 16ம் (March 16) இல் 341 பேர் தொற்றாளர்களாகவும் ஒரேயொரு மரணமாகவும் மட்டுமே இருந்தது. ஆனால் இந்தத் தொற்றுகளும் மரணங்களும் மேலும் ஒரு மாதத்தில் கிடுகிடென உயர்ந்துள்ளது. ஏப்ரல் 12(April 12) திகதி நிலைவரப்படி 23 ஆயிரத்திக்கும் (23,318) மேற்பட்ட தொற்றுகளுமாகவும் 653 பேரைப் பலியாக் கியுமுள்ளது. கனடாவில் இந்தக் கொரோனாவால் கணிசமான தமிழ் மக்கள் பலியாகியும் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதில் முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்களும் எச்சரிக்கைகளைக் கவனிக்காமல் இருந்தவர்களும் உள்ளனர்.
இந்தத் தொற்றுகளும் மரணங்களும் கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டிருக்கிறது என்றும் மக்கள் சுய கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறும் விழிப்புடன் நடந்துகொள்ளுமாறும் கனடிய அரசும் மருத்துவர்களும் மக்களை எச்சரித்துக் கொண்டிருக்கிறது.